Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு விழாவுக்குப் பள்ளி மாணவர்கள் டார்கெட்: என்னங்க சார் உங்க சட்டம்?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்திவருகிறது அ.தி.மு.க. ஏற்கெனவே கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், வண்டலூரில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் இணைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. எனவே, இதை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

மாணவர்கள்


இதனால், வழக்கத்தைவிட அதிகமான பேனர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கூட்டத்திலும் குறைவு இருக்கக்கூடாது என்பதற்காக, பள்ளி மாணவர்களை வரவழைத்துள்ளனர்.

மாணவர்கள்

இதற்காக, பள்ளிக் கல்வித்துறைக்கு டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நூற்றாண்டு விழாக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு, இன்று காலை முதலே பள்ளி மாணவர்கள் படையெடுத்துவருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்காக, கடும் வெயிலிலும் அவர்கள் நீண்ட வரிசையில் வைத்தே உள்ளே அனுப்பப்பட்டனர். சுமார் 20,000 மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள்


இந்நிலையில், காலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காகவே மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், அங்கு பள்ளி மாணவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்துத்தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிகழ்ச்சிக்காக, காலை 8 மணிக்கே வந்துள்ளனர். இதனால், பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வந்துள்ளனர். இங்கு உணவுக் கொடுக்கப்படும் என்ற நிலையில் அவர்கள் காலை உணவைக் கூட சாப்பிடாமல் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்வில்லை. ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், 200 மி.லி வாட்டர் கேன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

அதேபோல, மாணவர்களுக்கு சரியான இருக்கை வசதி செய்துத்தரப்பிடவில்லை. பல மாணவர்கள் இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு தேவையான இருக்கைகளையும் மாணவர்களை வைத்தே தூக்க வைத்துள்ளனர். விழா நடக்கும் இடத்தில் காற்றோட்ட வசதியும் இல்லை. ஃபேன்கள் ஓடவில்லை. குறிப்பாக, மாணவிகளுக்கு கழிவறை செய்து கொடுக்கப்படவில்லை.

விழாவில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து வீடியோ காட்சிகள் போடப்பட்டுள்ளன. அதை விசில் அடித்து ஆரவாரத்துடன் மாணவர்கள் பார்த்தனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close