Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கம்பரின் புகழைப் போற்றுவது தொடர்பான மனுவில் சுற்றுலாத்துறை பதிலளிக்க உத்தரவு !

கல்வியில் பெரியவர் கம்பம், கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவி பாடும் என்பது கம்பரைப் பற்றிய சிறப்பு. தமிழுக்குப் பல பெருமைகள் சேர்த்த கம்பரின் நினைவு இடங்களும், நினைவு நாள்களும் முறையாகப் போற்றப்படுவதில்லை என்று தமிழ் ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருமுருகன் என்பவர் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கம்பரின் சமாதி சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. தமிழுக்குப் பெரும் பணியாற்றிய பெருமைக்குரியவர் கம்பர். ஆனால், அவரின் சமாதியை அரசுத்தரப்பில், முறையாகப் பராமரிப்பதில்லை. கம்பர் நினைவிடம் மிகவும் மோசமான நிலையில், முட்புதர்களும், சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, கவிபாடும் கம்பனின் நினைவிடத்தைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும், அவரது நினைவு தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இதுகுறித்து, சுற்றுலாத்துறையின் முதன்மைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close