Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டம் 

பி.எஸ்.என்.எல் மதுரை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணியாற்றும் என்.எப்.டி.இ.(NFTE) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்து இன்று மதுரையில் மாபெரும் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தினார்கள்.  

bsnl

மதுரை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர், தங்கள் சங்கத்தினரைத் தொடர்ந்து பழி வாங்குவதாகவும், மற்றொரு சங்கமான இ.யூ.வுக்கு அதிகமான சலுகைகள் காட்டுவதாகவும், இ.யூ சங்கத்தினர்  நினைத்த வேலையை நினைத்த இடத்தில் செய்யவும், அவர்களைப்  பணி மாறுதல் செய்வதற்காக தங்கள் சங்கத்து ஊழியர்களைக் கட்டாய இடமாறுதல் செய்வதாகவும், சுழற்சி முறையில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அயல் பணி என்ற பெயரில் ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்காமலும், தொடர்ந்து இ.யூ சங்கத்துக்கு ஆதரவாக செயல்படும் பொது மேலாளரைக் கண்டிக்கும் விதமாக இந்தப் போராட்டத்தை நடத்துவதாகக் கூறினார்கள். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். தங்கள கோரிக்கைக்கு உடனே  தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கவுள்ளதாகக் கூறினார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close