Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 83 பேரை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை

இலங்கைச் சிறையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 83 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடித்தலில் ஈடுபடும் தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி வருவதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுதலை செய்யப்பட்டபோதும் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதுவரை சுமார் 178 விசைப்படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள்

மேலும், கடந்த 3 மாதங்களில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 83 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  தலைமையிலான குழு இலங்கை சென்றுள்ளது.
அமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவினர் இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய  இலங்கை அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்
. இதைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க பரிந்துரை செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை அதிபர் மூலம் இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான பரிந்துரையை நாளை இலங்கை நீதிமன்றங்களில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிந்துரையை ஏற்று இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு பின்னர் நாடு திரும்புவார்கள்.

மீனவர்கள் விடுதலை குறித்த இலங்கை அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள தங்கள் படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close