Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்த ஆட்சியை அசைக்க முடியாது!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

'தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசை யாராலும் அசைக்க முடியாது' என்று வண்டலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க சார்பில் அதன் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்த பிறகு தமிழக அரசு சார்பாக நடந்து வரும் நூற்றாண்டு விழாவில் இருவரும் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றுகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையை அடுத்த வண்டலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கட்சியைக் காப்பாற்ற எந்தத் தியாகத்தையும் செய்ய தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். அ.தி.மு.க-வை கூறுபோட ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். சுயநலத்துக்காக யாரும் இந்த இயக்கத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது' என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close