Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் எவர்சில்வர் பாலிஷ் தொழிலாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் 

மதுரை ஒத்தக்கடையில், எவர்சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு கேட்டு அனைத்துப் பிரிவு எவர்சில்வர் தொழிற்சங்கங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

மதுரை ஒத்தக்கடை பகுதியில் எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும், பாலிஷ் போடும் தொழில் பட்டறைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள தொழிற்கூடங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றிவருகிறார்கள். இதனாலேயே, இந்தப் பகுதியில் பல குடும்பங்கள் குடியேறினார்கள். சமீபகாலமாக இத்தொழிலில் இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், எவர்சில்வர் பாத்திரப் பட்டறைகள் வேலையாட்களைக் குறைத்து வருவது மட்டுமல்லாமல், கூலியையும் குறைத்துவிட்டனர். 

உண்ணாவிரதம்

இந்த நிலையில், தங்களுக்கு நியாயமான கூலி தர வேண்டுமென்று தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இதற்கு,முதலாளிகள் ஒத்துக்கொள்ளவில்லை. 125 நாள்களாக வேலை நிறுத்தம்செய்துவந்த அனைத்துத் தொழிலாளர் சங்கங்க உறுப்பினர்கள், வருமானமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுவருகிறார்கள். அனைத்துத் தொழிலாளர் சங்கங்களின் தொழிலாளர்கள் இன்று முதல் ஒத்தக்கடையில் சாகும்வரை உண்ணாவிரத்தைத் தொடங்கியுள்ளனர். இதுவரை இவர்களின் பிரச்னைகளைத் தொழிலாளர் துறையும், மாவட்ட நிர்வாகமும் தீர்த்து வைக்க முன்வரவில்லை என்று புலம்புகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close