Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கள்ளநோட்டு வைத்திருந்தவர் கைது! 30 லட்சத்துக்குப் புதிய 2,000 நோட்டுகள்

காரைக்குடியில் முப்பது லட்சம் மதிப்பிலான போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பிடிப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிளாஷா லாட்ஜில், நீண்ட நாள்களாக சையது பஷீர் என்பவர் தங்கியிருக்கிறார். இவர் தங்கியதற்கு வாடகை கொடுக்காமல், கடந்த சில நாள்களாக இழுத்தடித்ததாகத் தெரிகிறது. ஆனாலும், ஆட்கள் வரப்போக இருந்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் நிர்வாகத்தினர், காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர். உடனே காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ஆகியோர் லாட்ஜில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, சையதுபஷீர் தங்கியிருந்த அறையில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பதிமூன்று கட்டுகள் பிடிபட்டன. போலீஸார் சையது பஷீரிடம் தீவிர விசாரணை செய்தபோது, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, காரைக்குடி அருகிலுள்ள இலுப்பகுடியைச் சேர்ந்த பாண்டி செல்வத்துக்கும் சையது பஷீருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

சையது பஷீரிடம் போலி ரூபாய் நோட்டுகள் எங்கு ஜெராக்ஸ் போடப்பட்டது என்று விசாரித்து வருகிறது போலீஸ். கலர் ஜெராக்ஸ் எடுக்கப் பயன்படுத்திய மெஷின், பேப்பர், மை எங்கிருந்து வாங்கப்பட்டது என்றும் விசாரணைசெய்துவருகிறார்கள் காரைக்குடி போலீஸார்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் கும்பல், கமிஷனுக்காக தமிழகம் முழுவதும் வலைவீசி வருகிறார்கள். இந்தக் கும்பலுக்குப் பின்னால் பெரிய அரசியல் நெட்வொர்க் இருக்கிறதாம். ஆகையால், போலீஸார் இவர்களைப் பிடித்தாலும் பெரும்பாலும் விட்டுவிடுகிறார்கள். போலீஸார் ஒழுங்கான முறையில் விசாரணை செய்தால், காரைக்குடியில் முக்கியப் பிரமுகர்கள் சிக்கலாம் என்கிறார்கள், ஒரு சில போலீஸ் அதிகாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close