Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''சினிமாவை கோட்டை விட்ட பின்  வேறென்ன கோட்டை கட்ட..?'' கமலுக்கு தமிழிசை பதிலடி!

''கோட்டை நோக்கிப் புறப்படுவோம்'' என்று கோவையில் பேசிய கமலுக்கு, பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர், 'சினிமாவை கோட்டை விட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட..?'' என்று கூறியுள்ளார்.

தமிழிசை

கோவை ஈச்சனாரியில், கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியப் பொருளாளர் தங்கவேல் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ''ஓட்டுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் மாற்ற வேண்டியது நம் கடமை. நாம் நம்முடைய வேலையைச் செய்வோம். என்றைக்காவது நமக்குத் தேவை வரும். அப்போது கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். உங்கள் கையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தைச் சுத்தமாக வைக்கப் போராடுவோம். இந்தச் சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. என்னைப் பார்த்து தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். உங்களுக்குத் தலைமை ஏற்கத் தைரியம் வந்துவிட்டதா என்று நான் கேட்கிறேன்'' என்று பேசியிருந்தார். 

 

கமல்

அதற்கு பதிலளிக்கும் வகையில், தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில், ''கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை ட்விட்டரில் கட்டினால் என்ன... கோவையில் கட்டினால் என்ன? சினிமாவை கோட்டைவிட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட?'' என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close