Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் இருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு!

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகள்

குறுகிய கடல் பகுதியினை எல்லையாகக் கொண்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் வீசும் காற்றின் வேகத்தாலும், மீன்களின் வரத்தினாலும் இலங்கைக் கடல் பகுதிக்குள் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற எல்லை தாண்டும் சம்பவங்களாலும், இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி இந்தியக் கடல் பகுதிக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களைச் சிறைப் பிடித்துச் செல்வதாலும் பாக் நீரிணைப் பகுதியினைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 178-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான மீனவர்களும் சிறைப்பிடிப்புக்கு உள்ளாகினர். சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் பெரும் பகுதி மீனவர்கள் தங்கள் தொழிலை மறந்து மாற்றுத் தொழில் தேடி இடம் பெயறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 83 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்ய பரிந்துரை செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்து தனது வேட்டையை மீண்டும் தொடங்கியிருக்கிறது இலங்கைக் கடற்படை. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற ஜஸ்டின், வர்க்கீஸ், முத்து, சந்துரு உட்பட 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இன்று அதிகாலை சிறைப் பிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர் காரை நகர் கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு படகு பழுதடைந்ததால் அந்தப் படகினையும் அதிலிருந்த மீனவர்கள் 4 பேரையும் இலங்கைக் கடற்படையினர் விடுவித்துள்ளனர். ஆனால், அவர்கள் தற்போதுவரை கரைக்கு வந்து சேரவில்லை.

இந்தியப் பெருங்கடல் வளர்ச்சி குறித்த மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைச் சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close