Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி? இணையதளச் சேவையைத் தொடங்கியது போலீஸ்

பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில்,  புதிய இணையதளச் சேவையை தமிழகம் முழக்க காவல்துறை தொடங்கியுள்ளது. இன்று, மதுரை மாவட்டத்தில்  இந்தச் சேவையைத் தொடங்கிவைத்துப் பேசிய எஸ்.பி. மணிவண்ணன், ''http:// eservices.tnpolice.gov.in  என்ற இணைய தளத்துக்குள் சென்று,  சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள்  தங்களுடைய இழப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெற்றுக்கொள்ள , பல தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதை, அரசு இ-சேவை மையத்துடன் இணைந்து செயல்படுத்துகிறோம். இதற்கு, 10 ரூபாய் கட்டணத்தை நெட் பேங் மூலம் செலுத்தினால் போதும். தேவைப்பட்ட தகவல்கள், பாதிக்கப்பட்டவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

எஸ்.பி.மணிவண்ணன்

இதுபோல, வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற  அடையாள அட்டைககள்  தொலைந்துபோனால், அதை வழக்காகப் பதிவுசெய்வதற்கு ஆன்லைனில் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கு எல்.டி.ஆர். எனும் குறிப்பு எண்ணுடன் பயனீட்டாளருக்கு அனுப்பிவைக்கப்படும். வரும்  நாள்களில்,  அனைத்துக் கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவியருக்கு  விழிப்புஉணர்வு முகாம் நடத்த உள்ளோம்.  பெற்றோர்கள், மாணவர்கள் தனிமையாக இருக்கும்போது, உடனே அவர்களின் செயல்பாடுகளைக்  கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் விரும்பினால், நாங்கள் கவுன்சலிங்  கொடுப்போம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close