Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணினிமயமானது காவல்துறை - ஆவணங்களுக்குக் காத்திருக்கத் தேவையில்லை!

காவல்துறை கண்காணிப்பாளர்

காவல்துறை கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டதால், ஆவணங்கள் தொலைந்தது உள்ளிட்ட குறிப்பிட்ட சில புகார்களுக்காக இனி காவல் நிலையம் அலையத் தேவையில்லை

பொதுமக்கள் பயன் அடையும் வகையில் தமிழக காவல்துறையின் சார்பாக இரண்டு புதிய இணையதள வசதிகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. http://eservices.tnpolice.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாக புதிய சேவைகளைப் பெற வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வழக்குகளின் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் இழப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வழக்கின் ஆவணங்களைப் பெறலாம்.

வழக்கு விசாரணையின்போது, காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை அடிப்படையாகக்கொண்டு, பயனீட்டாளர்கள் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆவணங்களின் நகல்கள், பயனாளிகளின் மின்னஞ்சலிலும் அனுப்பப்படும். இந்தச் சேவையை அரசின் இ-சேவை மையத்துடன் இணைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். 

அருண்சக்தி குமார்

இது தவிர, பாஸ்போர்ட், வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், அதுகுறித்து  ஆன் லைன் மூலமாகவே காவல்நிலையங்களில் புகார் செய்ய முடியும். அத்துடன், அந்தப் புகார் தொடர்பான ரசீதையும் உடனடியாகவே பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆவணங்கள் தொலைந்துபோனால், காவல்நிலையத்துக்கு நேரில் சென்று அலைவதைத் தடுக்கும் வகையில், சில நிமிட நேரங்களிலேயே புகார் செய்ததற்கான ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதிகளை நெல்லை மாவட்ட எஸ்.பி., அருண்சக்தி குமார் இன்று தொடங்கிவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close