Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சி அந்தஸ்து காக்கப்பட வேண்டும்’- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடனோ அல்லது வேறு எந்த பல்கலைக்கழகத்துடனோ இணைக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்காக மத்திய அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கிவிட்டது. அதற்கான பணிகளை மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். இந்தச் சூழலில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அல்லது மற்றெந்த பல்கலைக்கழகங்களுடனோ இணைக்கும் முடிவைக் கைவிட்டு, அந்த நிறுவனத்தின் தன்னாட்சி அந்தஸ்தைக் காக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். செம்மொழியான தமிழ்மொழியைக் கற்க விரும்புவர்களுக்குச் சிறந்த இடமாக அந்த நிறுவனத்தை மாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close