Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிக் பாஸ்' டாஸ்க்குகள் எனக்குப் பிடிக்கவில்லை! பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஓவியா விலகினாலும் விலகினார், இப்போது அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில், ஓவியா ஆர்மிக்கு ஆதரவாக இருந்தவர்கள். அந்த ஆதரவை அவரோடு நிறுத்திக்கொண்டார்கள். பலரும் ஓவியாவை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை ஓவியா ஆர்மி. 'பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேறியப் பிறகு, சில நாள்களுக்குப் பிறகு தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவுசெய்திருந்தார்.

அதன்பிறகு, தன் ட்விட்டர் பக்கத்திலும் நன்றி தெரிவித்திருந்தார். அவர் சென்றப்பிறகு, 'பிக் பாஸ்' வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க புது வரவுகள் வர இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் 'கல்யாணம் முதல் காதல் வரை' புகழ் நடிகை பிரியா பவானிசங்கர் நுழையவிருப்பதாக அவரின் பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியானது. அதையடுத்து, 'நான் ட்விட்டரில் இல்லை. அது என்னுடைய அக்கவுண்ட் இல்லை' என மறுத்திருந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சி குறித்து சமீபத்திய பேட்டியொன்றில், 'துணி துவைப்பது, சமையல் செய்வது என்று பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அங்கு நடக்கும் சண்டைகள் நல்ல சுவாரஸ்யமாக உள்ளது. கடந்த சில நாள்களாக சண்டைகள், எமோஷன்கள் மிஸ்ஸாகிறது. வீட்டில் மறுபடியும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close