Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓணம் பண்டிகை... களைகட்டும் தோவாளை பூ மார்க்கெட்!

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியுள்ளது. 

தோவாளை மிகப்பெரிய பூ மார்க்கெட்டாக இருந்து வருகிறது. இங்கு பெங்களூரில் இருந்தும், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தோவாளையில் இருந்து பூக்கள் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. அந்த நிலைமாறி தற்போது மல்லிகைப் பூ உள்ளிட்ட பல்வேறு வகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் பழவூர், கோழியான் குளம், சிதம்பரபுரம், ஆவரைக் குளம் பகுதிகளில் இருந்தும் பூக்களின் வரத்து தோவாளைப் பூ மார்க்கெட்டுக்கு அதிகரித்துள்ளது. சேலம், ஓசூர், திண்டுக்கல், பெங்களுரில் இருந்தும் பல தரப்பட்ட பூக்கள் தோவாளைக்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.



ஓணம் பண்டிக்கை வருகிற 4-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால், குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளாவிலும் அத்தப்பூ கோலம் போடப்பட்டு  வருகிறது. பல வண்ணங்களிலான பூக்கள் மூலம் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதனால் பூக்களை வாங்குவதற்கு தென் மாவட்டங்களின் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். தேவை அதிகரித்திருப்பதால் பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தோவாளை மார்க்கெட்டில் இன்று புதிய ரக பூக்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஓசூரில் இருந்து டோரா, பமேரி, கோல்டு, அசீஸ், ரூபி, கரிஷ்மா பிங்க், வார்ணி, டுரைஸ் என 8 ரகங்களில் புதிய பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் உள்ள இந்த பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ பூ 150 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதேபோல் அரளி, கேந்தி, வாடாமல்லி, சம்பங்கி பூக்களும் அதிகளவு விற்பனை ஆகிறது. மல்லிகை, பிச்சிப்பூக்களையும் வியாபாரிகள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தோவாளை  மார்க்கெட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close