Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆட்சியையும் கட்சியையும் தினகரனிடம் ஒப்படைப்போம்’ - சிவகங்கை மாவட்டச் செயலாளர் உமாதேவன்

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க (அம்மா அணி) மாவட்டச் செயலாளராக திருப்பத்தூர் உமாதேவன் டி.டி.வி. தினகரனால் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்டம் முழுவதும் இன்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, சிவகங்கையில் எம்.ஜி.ஆர், வேலுநாச்சியார், நேதாஜி, அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். இதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்தோடு கொண்டாடினர். 

எம்.ஜி.ஆர். சிலை அருகில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் உமாதேவன், ‘நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று சொன்னவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தையும், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றி உலகம் போற்றுகிற அளவுக்கு கட்சியை வளர்த்தவர் ஜெயலலிதா. சசிகலா யார்? இவர்கள் குடும்பம் யார்? என்று கேட்கிறார் அமைச்சர் வீரமணி. இவருக்குப் பதவி பிச்சைப் போட்டது யார்? இந்த டி.டி.வி. தினகரன் தானே. 

சிவகங்கை மண்ணில் பலபேரை நான் ஏணியில் ஏற்றிவிட்டிருக்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு கட்சி அலுவலகம் கட்டுவதற்காக தொண்டர்களின் பணம் ஒரு கோடி ரூபாயை இன்றுவரைக்கும் வைத்திருப்பவர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துவிட்டு எங்களிடம் வாருங்கள். ஆட்சியையும், கட்சியையும் தினகரனிடம் ஒப்படைப்போம்’ என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close