Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காபி முதல் கம்ப்யூட்டர் வரை... நவீன கட்டமைப்பில் வாடகை ஆபீஸ்!

`ரெடிமேட் வீடுகள், ரெடிமேட் ஆடைகள், ரெடிமேட் இட்லிமாவு' என ரெடிமேட் பட்டியல் நீள்கிறது. இந்த ரெடிமேட் பழக்கம், பட்டித்தொட்டி முதல் ஹைடெக் சிட்டி வரை என அனைத்து இடங்களிலும் இருக்கிறது. இந்தப் பட்டியலில் தற்போது `ரெடிமேட் ஆபீஸ்'-ம் இணைந்துள்ளது. ஆம், `வீடு, சைக்கிள், கோட் சூட்' என ஏகத்துக்கும் வாடகைக்கு விடுவதைப்போல `ஸ்பேசஸ்' (Spaces) எனும் சர்வதேச நிறுவனம், ரெடிமேட் அலுவலகங்களை வாடகைக்கு விடும் தொழிலை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் செய்துவருகிறது. இந்த நிறுவனம், தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னையிலும் களமிறங்கியுள்ளது. 

ஆபீஸ்

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அந்தத் தொழிலில் ஈடுபடுவோர் தங்களது வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஓர் இடம் தேவைப்படுகிறது. வாடிக்கையாளருடன் சந்திப்பு மட்டுமின்றி, சிந்திக்கவும், சக ஊழியகர்களுடன் இணைந்து குழுவாகச் செயல்படவும், அமைதியான சூழல் தேவைப்படுகிறது. குறிப்பாக, புதிய தொழில்முனைவோர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வளரும் வணிகங்கள் என ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த ஓர் அலுவலகம் தேவைப்படுகிறது. ஆனால், ஓர் இடத்தைத் தேர்வுசெய்து அலுவலகத்தை உருவாக்கிட பல சிரமங்கள், செலவுகள் செய்யவேண்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தொழில்முனைவோர்களுக்குத் தேவையான இன்டர்நெட், ஃபர்னிச்சர், டெக்னாலஜி முதல் டீ, காபி வரை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அலுவலகத்தை வாடகைக்கு வழங்கிவருகிறது ஸ்பேசஸ் நிறுவனம். 

ஆபீஸ்

இந்த நிறுவனம் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஐரோப்பா, அமெரிக்கா, லத்தீன்-அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா என ஸ்பேசஸ் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உண்டு. இந்தியாவில் முதன்முறையாக ஹரியானா மாநிலம் குர்கானில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது. இப்போது இரண்டாவதாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூவில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது. இங்கு மட்டுமின்றி, சிட்டி சென்டர்,  ஒலிம்பியா பார்க், அண்ணாசாலை, ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர் உள்பட பல பகுதிகளிலும் 400-க்கும் மேற்பட்ட அலுவலகங்களை வாடகைக்கு விடுகிறது. 

ஆஃபிஸ்

இதுகுறித்து ஸ்பேசஸ் நிறுவன மேலாளர் ஹார்ஷ் லம்பா கூறுகையில், ``இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புனே, கோவை உள்பட பல நகரங்களில் ஸ்பேசஸ் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, ஒருவராக இருக்கலாம் அல்லது 10, 20 பேர் என எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவர்களுடைய நிறுவனத்தைப் பொறுத்தது. அலுவலக வாடகையைப் பொறுத்தவரை 10,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. வாடிக்கையாளர்களின் அலுவலக இடத் தேவையைப் பொறுத்து 40,000 மற்றும் 50,000 ரூபாய் எனப் பலதரப்பட்ட விலைகளில் வாடகைக்கு விடப்படுகிறது. ஸ்பேசஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பது மட்டுமின்றி, மகிழ்ச்சியான, ஊக்கம் அளிக்கக்கூடிய பலதரப்பட்ட வசதிகள் உள்ளன" என்றார் அவர். 

ஆபீஸ்

பரபரப்பான வாழ்க்கையின் ஓர் அங்கமாக அலுவலகம் இருக்கிறது. ஆனால், புதிய தொழில்முனைவோர்களுக்கு ஓர் அலுவலகத்தைக் கட்டி முடித்து அல்லது தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தொழில் நடத்துவது என்பது இன்றைய சூழ்நிலையில் இயலாத காரியம். இதுபோன்ற நிலையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஓர் அலுவலகத்தையே தேர்ந்தெடுப்பது நல்ல காரியம். குறிப்பாக, இந்த ஸ்பேசஸ் அலுவலகங்களில் உங்களுக்குப் பிடித்தமான இடத்தைத் தேர்வுசெய்து, அங்கு ஒரு மாதமோ, மூன்று மாதங்களோ வாடகை கொடுத்து நீங்கள் பணிபுரியலாம். ஒருவேளை உங்களுக்கு அந்த அலுவலகம் பிடிக்கவில்லை, சரியில்லை என ஏதாவது ஒரு பிரச்னை இருந்தால்கூட `வேண்டாம்' எனச் சொல்லிவிடலாம். இந்த ஸ்பேசஸ் அலுவலகத்தில் முக்கிய விசேஷம் என்னவென்றால், `நீங்கள் வந்தால் மட்டும் போதும்' என வசனம் பேசுவதைப்போல, நீங்களோ அல்லது உங்களுடைய ஊழியர்களோ அந்த அலுவலகத்துக்குச் சென்றால் மட்டும் போதும். அனைத்து வசதிகள் மற்றும் சேவைகளை வழங்க ஸ்பேசஸ் ஊழியர்களே இருப்பது நல்ல விஷயம்தானே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close