Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை கனமழை எதிரொலி... தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்!

ரயில்

மும்பையில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக நெல்லை - மும்பை இடையிலான தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக மும்பையில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மும்பையில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது மழை நின்றதுடன் வெள்ளமும் வடியத் தொடங்கி இருப்பதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. வெள்ளம் காரணமாக நெல்லையில் இருந்து மும்பைக்குச் செல்லும் ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’திருநெல்வேலி – மும்பை தாதர் விரைவு ரயில் (வண்டி எண்.11022) நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து இன்று (31-ம் தேதி) மதியம் 2.45 மணிக்கு புறப்படவேண்டிய இந்த ரயில் நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) இரவு 11.00 மணிக்குப் புறப்படும். மும்பை கனமழை காரணமாக இணை ரயில் தாமதமாக வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்இதே போல், திருநெல்வேலி – மும்பை தாதர் விரைவு ரயில் (வண்டி எண்.11022), திருநெல்வேலியில் இருந்து நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) மதியம் 2.45 மணிக்கு புறப்படவேண்டிய ரயில், 2-ம் தேதி அதிகாலை 1.00 மணிக்குப் புறப்படும். இணை ரயில் தாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ரயில் நேரம் மாற்றம் காரணமாக அங்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் மும்பையில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு குறிப்பிட்ட காலத்தில் மும்பை செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால், ரயில் நேரத்தில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close