Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு..! குளிக்கத் தடை!

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி, நள்ளிரவு முதல் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி

நெல்லை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செங்கோட்டை, புளியரை, குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தின் அணைகளில் தண்ணீர் அதிகரித்துவருகிறது. இதனால், வறட்சியால் வறண்டுகிடந்த அணைகளின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, பிரதான அணையான பாபநாசத்தில் ஓர் அடியும் சேர்வலாறு அணையில் இரண்டு அடியும் ஒரே நாளில் உயர்ந்திருக்கிறது. மணிமுத்தாறு அணையில் ஓர் அடி நீர் உயர்ந்துள்ளது. இது தவிர, குண்டாறு, கடனா, ராமநதி ஆகிய அணைகளிலும் கணிசமாக நீர் வரத்து உள்ளது. இந்தத் தண்ணீர், விவசாயத்துக்குப் பயன்படுவதை விடவும் மக்களின் குடிநீர் தேவைக்குப் பயன்படும் என்பதால், அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பழைய குற்றாலம்

தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்துவருகிறது. இதனால், குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக கொட்டத் தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாகப் பெய்யும் மழையால், குற்றாலத்தின் பிரதான அருவியில், பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. இரவில் அதிகரிக்கத் தொடங்கிய தண்ணீர், நள்ளிரவில் உக்கிரமாகக் கொட்டியது. இதனால், நள்ளிரவு முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

மெயின் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கிறார்கள். குறிப்பாக, பழைய குற்றாலம் அருவியில் இதமான சீதோஷ்ண நிலையுடன் அருவியில் கொட்டும் நீரில் பயணிகளுக்கு உற்சாகம் அளிப்பதால்,மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர். அருவிகளில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால், காவல்துறையினரும் வனத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close