Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வீடு திட்டத்தின்மூலம் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக வீடு கட்டும் குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு 2,10,000  ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது. மதுரையில், இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க, வார்டு வாரியாக சிறப்பு முகாம்களை நடத்த மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.

awas


இந்தத் திட்டத்தில் பலன் பெற விரும்புபவர்கள், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் குடிசை வீடு, ஓட்டு வீடுகளில் வசித்து வருபவராக இருக்க வேண்டும். காலிமனை இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவரின் பேரில் பட்டா, பத்திரம் இருக்க வேண்டும். அவர் பெயரிலோ, அவரது குடும்பத்தினரின் பெயரிலோ வேறு எங்கும் வீடு, சொத்து இருக்கக் கூடாது. மாத வருமானம் 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வீடு கட்ட,  குறைந்த வட்டியில் வங்கிக்கடனுக்கு ஏற்பாடுசெய்து தரப்படும். ஏற்கெனவே எடுத்த கணக்கெடுப்பில், பெயரைப் பதிவுசெய்யவில்லையென்றால் நகராட்சி, மாநகராட்சி அல்லது குடிசை மாற்று அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்று பதிவுசெய்யலாம். சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால், உங்களுக்கு மானியத்தொகை 2,10,000 ரூபாயை நான்கு தவணைகளாக வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படும். இதைப் பற்றிய விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். தகுதி இருந்தும் உங்களைத் தேர்வுசெய்யவில்லை என்றால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close