Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 ஹெச் செயற்கைக்கோள் தோல்வி..! இஸ்ரோ விளக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' நேற்று மாலை ஶ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட்டின் முன்பகுதியில் உள்ள வெப்பப் பாதுகாப்புத் தகடு பிரியாததால், அதில் அனுப்பப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஹெச் செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து வெளியேற முடியாமல் புவி வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை மீட்க நடந்த பல மணி நேர முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இஸ்ரோ


அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு என்று வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை, நாம் பயன்படுத்தும் மொபைல் வரைக்கும் வழிகாட்டுவதற்கு உதவுகின்றன. ஜிபிஎஸ், க்ளாஸ்னாஸ், கலிலியோ ஆகிய பெயர்களில் செயல்படுகிறது. இதைப்போன்றே இந்தியாவிற்கும் தனிப்பட்ட வழிகாட்டுதல் செயற்கைக்கோள் ஏவும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ என்கிற செயற்கைக்கோள் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், அதிலிருந்த அணுக்கடிகாரங்கள் சரியாகச் செயல்படவில்லை. எனவே, அதைக் கைவிட்டு, அதற்கு மாற்றாகத்தான் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் - 1 ஹெச் என்கிற புதிய செயற்கைக்கோள் நேற்று ஏவப்பட்டது. இந்நிலையில், அது ராக்கெட்டிலிருந்து வெளியேற முடியாததால் கைவிடப்பட்டதாகவும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close