Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதை எதிர்த்து வழக்கு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 17-ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியைத்தொடங்கினர். இந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதை எதிர்த்து, திருச்சியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ’உச்ச நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது வீட்டை அரசு சார்பில் நினைவிடமாக்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். அதேபோல, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் முன்னர், அவரது சட்டபூர்வ வாரிசுகளான தங்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் சட்டப்படி நினைவிடமாக்கப்படும் என்று கூறியிருந்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close