Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெல்மெட் அபராதம்: நெல்லை மாநகரில் மட்டும் ரூ.1 கோடி வசூல்

ஹெல்மெட் சோதனை

நெல்லை மாநகரில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, நடப்பு ஆண்டில் மட்டும் 1.26 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.

நெல்லை மாநகரில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் பொது அமைதியைப் பாதுகாக்கவும் 54 ரவுடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விடவும் இரண்டு மடங்கு அதிகம். அத்துடன், வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க, நெல்லை மாநகரக் காவல்துறையின் சார்பாக 14 இருசக்கர வாகன ரோந்துப் பிரிவும், 8 நான்கு சக்கர ரோந்துப் பிரிவும், 3 நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவும் அமைக்கப்பட்டிருப்பதால், கடந்த ஆண்டை விடவும் குற்றச்செயல்கள் குறைந்திருப்பது புள்ளிவிவரங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. 

கமிஷனர் அலுவலகம்இந்த ஆண்டு, நெல்லை மாநகரில் 9 கொலை, ஒரு கொள்ளை, 15 வழிப்பறி, 66 திருட்டு என மொத்தம் 91 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக 11.60 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை, 1,22,359 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 3,909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அவசியம் என்பதை காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனாலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. அவ்வாறு தலைக்கவசம் அணியாததற்காக 40,918 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மட்டும் 1,26,26,590 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மாநகரப் பகுதிகளில் மட்டும் 1,182 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்து அலுவலகத்துக்கு காவல்துறை பரிந்துரைசெய்துள்ளது. அதில், 267 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. 

சாலை விபத்துகளைத் தடுக்க, நெல்லை மாநகரக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு, இதுவரை 207 வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விடவும் இது 50 சதவிகிதம் குறைவாகும். வாகன விபத்தையும் அதனால், ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்கும் வகையில், தொடர்ச்சியாக விழிப்பு உணர்வு நடவடிக்கையில் நெல்லை மாநகரக் காவல்துறை ஈடுபட்டுவருகிறது. இதற்கு, பல்வேறு சமூக நல அமைப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close