Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தி.மு.க-வின் கோரிக்கையை நிறைவேற்றினால் நல்லது!' - தங்க தமிழ்ச்செல்வன்

”எங்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், அவர்கள் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தனர். மாறாக, எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது” என்று தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பி.எஸ் அணியும் இணைந்ததையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருக்கின்றனர்.

11-வது நாளான இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எங்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. நாங்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இவை இரண்டிலும் எது நடந்தாலும் நல்லதுதான். இந்த விவகாரத்தில், நாளைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்.

எங்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், அவர்கள் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும் எங்கள் அணியில் உள்ளவர்களில் ஒருவர்கூட அங்கு செல்லவில்லை. மாறாக, எங்களுடைய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. எங்களுடைய இறுதியான நிலைபாட்டை அவர்கள் புரிந்துகொண்டனர். இதற்கு மேலும் நல்ல முடிவை எடுக்கவில்லை என்றால், அது எல்லோருக்கும் ஆபத்து” என்று பேசினார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close