Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ. 5.5 லட்சம் கோடியில் முக்கிய நதிகளை இணைக்க மோடி அரசு திட்டம்!

நாட்டின் முக்கிய நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

நதி நீர் இணைப்பு

'இந்தியா முழுவதும் ஓடும் நதிகளை இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கை, பல ஆண்டு காலமாக இருந்துவருகிறது.  நதிகளை இணைப்பதால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும் என்று எதிர்ப்பும்கிளம்புகிறது.  இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், 1982-ம் ஆண்டு, தேசிய நீர் மேலாண்மைக் கழகம் அமைக்கப்பட்டது.  நதிகள் இணைப்பைக் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் முடங்கியது. 

 நாட்டின் வடபகுதி வெள்ளத்தில் மிதக்க, தென்பகுதி வறட்சியில் தவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதும் தமிழகம் தண்ணீருக்குத் தவிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது. நதிகள் இணைப்பால், வெள்ளம் வரும் காலத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்ப முடியும். இதனால், வெள்ளம் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதோடு  வறட்சி குறைந்து  விவசாயம் செழிக்கும் வாய்ப்பும் அதிகம்.

நாட்டின் மிகப் பெரிய நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, மகாநதி ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, மற்ற பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்பிவிட்டால் மட்டுமே வெள்ளப் பாதிப்பிலிருந்து  மீள முடியும்.  வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத வெள்ளம்,  மோடி அரசை சிந்திக்க வைத்திருப்பதாகவும், நதிகள் இணைப்பின் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நதிகளை இணைக்க ரூ.5.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்க உள்ளது. நாட்டின் 60 பெரிய நதிகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களில் ஓடும் கர்னாவதி-பெட்வா நதிகளை இணைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. கர்னாவதி ஆற்றில் அணை கட்டப்பட்டு, அங்கிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி, பெட்வா நதிக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்பட உள்ளது.  குஜராத்,  மகாராஸ்டிராவில் ஓடும் நர்மதை, பர்தாபி நதிகளும் இணைக்கப்பட உள்ளன. இதே மாநிலங்களில் ஓடும் தாமன் கங்கா நதியை, பிஞ்சால் நதியுடன் இணைக்கும் முதல் கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. இதற்கு ரூ. 2,764 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அச்சன் கோயில் - வைப்பாறு, காவிரி- வைகை- குண்டாறுகளை  இணைப்பதால், தமிழகத்துக்கு நல்ல பலன் கிடைக்கும். 

''கிடைக்கும் தண்ணீரைவிட அதிகத் தண்ணீரை வீணடிக்கும் நாடு இந்தியா'' என சர்வதேச நீர் மேலாண்மை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close