Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிக்குப் பின்னடைவை ஏற்படுத்திய அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள்! 

`பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டன' என ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்தது மத்திய அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்கத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்துள்ளது. இதுவும் மத்திய அரசுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 

மோடி


நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு ஜி.டி.பி வளர்ச்சி 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த ஜி.டி.பி வளர்ச்சியாகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.9 சதவிகிதமாக இருந்தது. அதே நேரத்தில் மார்ச் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்தது. நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியைப் பொறுத்தவரைக் கடந்த 2015-ம் ஆண்டில் சீனாவின் ஜி.டி.பி-யை விஞ்சி இருந்தது. ஆனால், மார்ச் 2016-ம் காலாண்டுக்குப் பிறகு, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. அதன் பின் கடந்த 6 காலாண்டுகளாக நம் நாட்டின் ஜி.டி.பி ஆனது தொடர்ந்து குறைவடைந்துகொண்டே வருகிறது. 

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 6.6 சதவிகித வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கருத்துக் கணிப்பைவிட குறைவான அளவே வளர்ச்சியே எட்டப்பட்டிருக்கிறது. முக்கியமாகப் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கை என அடுத்தடுத்த இரண்டு முக்கிய நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியான 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது மத்திய அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஜி.டி.பி வளர்ச்சியும் குறைவடைந்துள்ளதாக வெளியான அறிவிப்பு, மோடி அரசுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close