Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குருப்பெயர்ச்சி - ராமனாதீஸ்வரப் பெருமான் கோயில்

நாளை குருப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னையில் இருக்கும் குருவுக்கான தலத்தைப் பற்றிக் காண்போம். சென்னையின் போரூர் பகுதியில் உள்ளது அருள்மிகு ராமனாதீஸ்வரப் பெருமான் கோயில். சென்னையில் உள்ள நவகிரக ஆலயத்தில் இது குருவுக்கான பரிகாரத் தலமாக உள்ளது. பரணி நட்சத்திரத்துக்காரர்களுக்கான தலமாகவும் இது உள்ளது. ராமபிரான் இலங்கை செல்லும் வழியில் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டார் என்றும் அதனாலேயே இந்த ஆலயம் ராமனாதீஸ்வரம் என்றும் உருவானது என்கிறார்கள். இதனால் இங்கு பெருமாள் கோயிலைப்போலவே தீர்த்தம் வழங்கப்படுகிறது. சடாரி சேவையும் இங்கு உண்டு.

குருப்பெயர்ச்சி

மிகப்பெரிய சிவலிங்க மேனியை கொண்ட ஆலயம் இது. போரில் வெற்றி பெற ராமர் இங்குள்ள சிவனையே குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்றபடியால் இது குருவுக்கான தலமாக மாறியது. ஈஸ்வரன் ராமநாதீஸ்வரர் என்றும் இறைவி சிவகாமசுந்தரி என்றும் வணங்கப்படுகிறார்கள். கோஷ்டத்தில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி பகவான் சிறப்பாக வீற்றிருக்கிறார். போர் குறித்த உபாயங்களைச் சொல்லி வெற்றி பெற உதவிய சிவனே இங்கு குருவாக அமர்ந்துள்ளார். எனவே, இங்கு வந்து வழிபட்டால், குருபகவானின் அருப்பெற்று பகையை வெல்லலாம் என்பது நம்பிக்கை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close