Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாமன மூர்த்தி அவதார தினம்

திருமாலின் பத்து அவதாரங்களில் வாமன மூர்த்தி அவதாரம் ஐந்தாவது. அசுரர்கள் கூட்டத்தை அடக்கி தேவர்களின் இந்திர லோகத்தை மீட்டுத்தந்த வடிவம் வாமன வடிவம். சிறிய வடிவம் கொண்டு ஒரே ஒரு திருவடியில் விண்ணையும், மண்ணையும் அளந்த மகா மூர்த்தி வாமனர்தான். அசுர சக்கரவர்த்தியான மகாபலி அரசர், மூவுலகங்களையும் அடக்கி ஆண்டு பெருமைகொண்டார். இவரது வளர்ச்சியைப் பொறுக்காத தேவர்கள், இவரால் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி திருமாலை தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு அபயம் அளித்து வாக்களித்தபடியே கஸ்யபர், அதிதி தம்பதிகளுக்கு புரட்டாசி மாதம், சுக்கில பட்சம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார் வாமன பகவான். யாகம் முடித்து மகிழ்வோடு இருந்த மகாபலி சக்கரவர்த்தியை அடைந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார். பிராமணச் சிறுவன் ஒருவன் தன்னை அணுகி, வரம் கேட்டது மன்னரை மகிழ்ச்சி பெறச் செய்தது. வந்திருப்பது திருமால், அவரால் மகாபலிக்கு ஆபத்து என்று உணர்ந்த அசுர குரு சுக்கிராச்சாரியார் மகாபலியை எச்சரித்தார்.

வாமன மூர்த்தி

எனினும் தனது வாழ்வைவிட, வாக்கே முக்கியம் என்று மூன்று அடி தானம் கொடுக்க துணிந்தார் மகாபலி. மண்ணகம் முழுவதையும் ஒரே காலால் அளந்துவிட்டு, விண்ணகம் முழுவதும் மற்றொரு அடியில் அளந்துவிட்டு இன்னொரு அடி எங்கே எங்கே என்று வினவினார் வாமனர். தனது தலையைக் காண்பித்து இன்னொரு அடி இதோ என்ற மகாபலியை வாழ்த்தி பாதாளம் நோக்கி அழுத்தினார். அன்று முதல் பாதாள உலகத்தின் சக்கரவர்த்தியானார் மகாபலி மன்னர். மகாபலியின் தியாகத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கிறார். தேவர்களை காக்க குறுமுனியாக அவதரித்த வாமன மூர்த்தி திருஅவதார நாள்தான் செப்டம்பர் 3-ம் நாள் கொண்டாடப்படுகிறது. வாமன பெருமாளின் திருவருளைப் பெற்று நலம் பெறுவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close