Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவியாவுக்கு 'பிக் ஸ்டார்' பட்டம்.. எந்தப் படத்தில் தெரியுமா? 

ஓவியா


'பிக் பாஸ்' ஓவியாவுக்கு குவிந்த ரசிகர்களோ ஏராளம், அவர் அந்த நிகழ்ச்சியில் இருக்கும்போதே திரையுலகத்தினர் பலரும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டி வந்தனர். அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியே வந்தப் பிறகு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, தான் பேசிய வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய, 'கொக்கு நெட்டக் கொக்கு..' பாடல் 'பலூன்' என்கிற தமிழ் படத்தின் புரமோஷன் பாடலாக்கப்படுகிறது என்கிற செய்தியும் வெளியானது. 

இந்நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் 'பிக் பாஸ்' புகழ் ஓவியாவும், நடிகர் பிருத்விராஜூம் இணைந்து நடித்த 'மனுஷ்யமிருகம்' என்கிற மலையாளப் படம் தமிழில், 'போலீஸ் ராஜ்ஜியம்' என்கிறப் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் போஸ்டர்களில் ஓவியாவுக்கு 'பிக் ஸ்டார்' என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், ஓவியா தமிழில் அறிமுகமான படம் 'களவாணி'. சற்குணம் இயக்கத்தில் விமல் நடிக்க படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஓவியாவுக்கு இருக்கும் வரவேற்புகளால், அவரின் மலையாளப் படங்கள் தமிழில் ஒரு பக்கம் ரீமேக் செய்யும் போட்டிகளுக்கு நடுவே விமல் சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாகவும், 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் சற்குணம் இயக்குகிறார் எனவும் கூறியிருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close