Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சையைக் கிளப்பும் அனிதா மரணம் தொடர்பான முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை..!

அனிதாவின் மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'நீட் தேர்வு' என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை. இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துவருகின்றன. 


நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த மாணவி அனிதா, நேற்று மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் அனிதாவின் இறப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைவெளியிட்டுள்ளார்.

அதில், 'அனிதாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 7 லட்ச ரூபாய் வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மாணவர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது அறிக்கையில் நீட் தேர்வு என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை. முதல்வரின் இந்த அறிக்கைக்கு நெட்டீசன்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close