Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குலசாமி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு..!

ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் பல்வேறு காரணங்களால் பதவி விலகவும் நேரிட்டது. பதவி விலகியதையடுத்து பன்னீர்செல்வம் அணி குறைந்த அளவு எம்.எல்.ஏ-க்களுடன்  இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தனர். 

ops

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டத்தில் பல கோயில்களில் தரிசனம் செய்தார். அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கே யானை மற்றும் குதிரைகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தார். இதையடுத்துக் திருவில்லிப்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத்தோப்பு பகுதியில் ஓ.பி.எஸ்ஸின் குலதெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

பொதுவாக தன் வாழ்நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் ஓ.பி.எஸ் குல தெய்வ வழிபாடு செய்வதும் வழக்கம். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸின் இன்றைய வழிபாடு அரசியலில் ஓர் முக்கிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றுவதற்காகவும் தங்கள் அணி வழுப்பெறவும் இன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாகவும ஓ.பி.எஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர். மேலும் ஓ.பி.எஸ் என்றும் இல்லாத அளவுக்கு தன் குல சாமி கோயிலில் மனம் உருக வழிபட்டதாகவும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close