Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அரசுகள் செய்த கொலை" - பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் #NEETKilledAnitha

அனிதாவின் மரணம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து பல மட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும் கருத்துகளும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய பத்திரிகையாளரான கவிதா முரளிதரன், அனிதாவின் தற்கொலைகுறித்து கூறுகையில்,  "இந்த நீட் என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி என்பதைத்தான் மீண்டும் அனிதாவின் தற்கொலையும் நிரூபித்துள்ளது.

ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்த பெண். மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள். தாயில்லாத பெண். 12 வருடங்களாக கடுமையான சூழலில் இருந்து படித்து வந்தவர். மருத்துவப்படிப்பைக் கனவாகக் கொண்டு படித்து வந்தவருக்கு நீட் என்கிற ஒன்றை முன்னிறுத்தியதும், அதன்மூலம் மீண்டும் ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு அவரை உள்ளாக்கியதுமே அனிதாவின் மரணத்துக்கு முக்கிய காரணம். நீட் மட்டுமே இதில் பிரச்னையில்லை இந்த அரசுகள், அவர்கள் செயல்படும் விதம், அதிகார வர்க்கம் இவை எல்லாமே சேர்ந்து செய்த கொலைதான் அனிதாவின் மரணம்" என்று தெரிவித்தார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close