Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா மரணத்தின் தாக்கம், குமுறும் தமிழ் சமூகம்...

அனிதாவின் மரணத்தோடு அவரது மருத்துவக் கனவும் மாண்டு போனது. அனிதாவின் மரணம்குறித்து வாட்ஸ்அப் குழுக்களில்  பலரும் ஆற்றாமையையும், துயரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

தற்கொலை பற்றி காரல் மார்க்ஸ் சொன்னது

லட்சக்கணக்கானோர் நடுவினில் எவருடனும் தொடர்பற்ற ஆழமான தனிமையில் இருத்தலும், எவரும் உணராவண்ணம் தன்னை மாய்த்துக்கொள்ளும் உள்ளுணர்வு மோலோங்கி நிலைதடுமாறுதலும் எந்தச் சமூகத்தில் நிகழ்ந்திடும்? இது சமூகமேயல்ல, காட்டு மிருகங்கள் வாழ்ந்திடும் பாலைவனமே ! இயற்கைக்கு முரணாக தற்கொலைகள் தோற்றமளித்தாலும், பல்வேறு தற்கொலைகளை உற்பத்திச் செய்வதே நம் சமூகத்தின் இயற்கை.

அனிதா

 

தொடரும் மாணவர் மரணங்கள்

வெமுலாவுக்கு அழுத போதும், முத்துகிருஷ்ணனுக்கு அழுத போதும் நமக்கு தெரியும் இது இத்தோடு நிற்கப்போவதில்லை என்று...
அனிதாவுக்கு அழுதுகொண்டிருக்கும் இந்த தருணத்திலும் நமக்குத் தெரியும் இது இத்தோடு முடியாது என்று....
அனிதாவும், முத்துவும், வெமுலாவும் தலித் என்று அடையாளத்தோடு மட்டும் அணுகிவிடக்கூடாது. அவர்கள், சாதாரண ஏழை குடும்பத்துப் பிள்ளைகள். உழைப்பால் உயரமுடியும் என்று நம்பி ஏமாற்றப்பட்டவர்கள் அவர்கள். மூன்றுபேரும் இந்தச் சமூகத்தை எதிர்த்து தங்கள் அளவில் போரடியவர்கள். சமூகத்தின் மீது தீராக் காதல்கொண்டவர்கள். சமூகப் போராளிகள் என்பதை உணர்வோம்.

மன்னித்து விடு

நீ சாகவில்லை
எங்களை செருப்பால் அடித்திருக்கிறாய்
உன் சகோதரர்களும், தகப்பன்களும் மாமன்களும்
பொட்டைப்பயல்கள் என்று சொல்லி
பொட்டில் அறைந்து விட்டு சென்றிருக்கிறாய்

ஒட்டு மீசைகளுடன் நாங்கள் உலாவுவது தெரிந்து
நீ சானியால் அடித்துவிட்டு சென்றிருக்கிறாய்
அம்மா... என் செல்லமே ....
சாகவேண்டியது நாங்களடா
நீ ஏன் சாகவேண்டும்

உன் கால்களில் விழுந்து கதறுகிறோம்
எங்களை மன்னித்து விடு
அடுத்த பிறவி என்றிருந்தால் அதில் நீ
ஆண்மகன்கள் உலாவும் மாநிலத்தில் பிறந்துவிடு

கூச்ச உணர்வோடும் குற்ற உணர்வோடும்
கதறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி
தெரியவில்லையடா என் செல்லமே
எங்களை மன்னித்து விடு மன்னித்து விடு ....

இப்படி கண்ணீர் கவிதைகளையும், கருத்துகளையும் வாட்அப் குழுக்களில், முகநூல்களில் பதிவிட்டு வருகின்றனர். அனிதாவின் மரணம் அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close