Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா தற்கொலையல்ல; கொலை ! தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

அனிதாவின் மரணம்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், 'நீட் தேர்வு முறையால் அனிதா தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக் கலந்தாய்வில் 196 கட் ஆப் மதிப்பெண் பெற்றும் அவர் கண்ட மருத்துவர் கனவு நிறைவேறவில்லை. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆசைப்பட்டது அனிதாவின் தவறா?  ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று போராடியும் கனவு பலிக்கவில்லை. 

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் படிப்பதற்கு குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். ஏழைத் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிக்க முடியாது. பணக்காரர்கள், மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவக்கல்வி படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எம்.எல்.ஏ-க்கள் கொண்டு வந்து ஆளுநரிடம் புகார் அளித்தால், அது அவர்களின் உட்கட்சி பிரச்னை என்கிறார்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close