Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மணல் சிற்ப வழக்கு..! தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய தி.மு.க வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாகர்கோவில் வடசேரியில் எம்.ஜி ஆர் சிலை அருகில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. அமைத்திருந்தார். இந்தச் சிற்பத்துக்கு கூரை மற்றும் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மாநில நெடுஞ்சாலையின் நடுவில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இரண்டு முறை விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மனுத் தாக்கல்செய்தார். 'அதில் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அமைந்துள்ள அதே வடசேரிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைந்துள்ளன. ஆனால், ஜெயலலிதா சிற்பத்தை மட்டும் அகற்ற வேண்டும் என்று மனுதாரர் கூறப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்காக பயன்படுத்த வேண்டாம். பொது நலனாக வழக்கு தொடர்ந்திருந்தால், இடையூறாக இருக்கும் அனைத்து சிலைகளையும் அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி  ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனிடம் பேசும்போது, ''மீண்டும் வழக்கு தொடர்ந்து ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றியே தீருவோம். விரைவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு மாபெரும் மறியல்செய்ய இருக்கிறோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close