Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நாகர்கோவிலில் இருந்து ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடற்பகுதியில் கரைக்கப்பட்டன. இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா  கடந்த 25-ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் இந்து மகா சபா, பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 4000- க்கும் மேற்பட்ட  சிலைகள் முக்கியப் பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்து மகா சபா சார்பில் வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட  சிலைகள்  நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து பூஜை செய்யப்பட்ட பின்னர், வாகனங்களில் ஏற்றப்பட்டு செண்டை மேளம் முழங்க, முத்துக்குடை ஏந்தி, குதிரை ஊர்வலத்துடன் கொண்டுசென்று சொத்தவிளை கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தை அகில இந்திய தேசியத் துணைத் தலைவர் தா. பாலசுப்ரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். விநாயகர்சிலை ஊர்வலத்தையொட்டி 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தால் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறின. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close