Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா மரணம்: கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய அரியலூர்! #NEETKilledAnitha

அனிதாவின் மரணத்தையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

அனிதா கடையடைப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அரியலூர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து, தற்போது, குழுமூரில் உள்ள அவர்களது வீட்டில் அனிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக கடையடைப்பு போராட்டம் என்றால், பல் நாள்களுக்கு  முன்பே திட்டமிட்டு நடத்தப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் பெரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடையடைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அனிதா கடையடைப்பு


சுமார் 90 சதவிகித கடைகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மற்றும் மருந்துக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு பின்னர், 100 சதவிகித கடைகள் அடைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல, பெரம்பலூரில், 50 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அனிதாவின் இறுதி ஊர்வலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close