Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணத்துக்குப் பெண் கிடைக்கவில்லை - அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை..!

திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்.

திருப்பூர், தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் கண்டியன்கோயில் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் தங்கவேல். திருப்பூர்  அண்ணா காலனி அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்தோடு குடியிருந்த தங்கவேலுக்கு, திருமணம் செய்துவைக்க கடந்த சில வருடங்களாகவே அவரின் பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர். கடந்த சில மாதமாகவே, திருமணத்துக்குப் பெண் கிடைக்காத விரக்தியில் இருந்த தங்கவேல் சமீபத்தில் மிகவும் மனமுடைந்துபோயிருக்கிறார். இந்நிலையில், அதிகாலை நேரம் வேதனையின் உச்சத்துக்கே சென்ற ஆசிரியர் தங்கவேல், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலை விடிந்ததும் தங்கவேல் சடலமாக கிடப்பதைக் கண்ட குடும்பத்தினர், அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினரை அழைத்திருக்கிறார்கள். பின்னர் தகவலறிந்த அனுப்பர்பாளையம் பகுதி காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, ஆசிரியர் தங்கவேலின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close