Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரக்பூர் குழந்தைகள் மரணம் - டாக்டர் கஃபீல்கான் கைது!

கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக டாக்டர் கஃபீல்கான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள, பாபா பகவான்தாஸ் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் இறந்தன. தொடர்ந்து குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் அந்தக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா அவரின் மனைவி பூர்ணிமா ஆகியோர் ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநில சிறப்பு காவல் படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் குழந்தைகள் வார்டு பொறுப்பாளர் டாக்டர் .கஃபீல்கான், அனஸ்தீசியா பிரிவுத் தலைவர் டாக்டர். சதீஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில்,'' இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்குட்பட்டு டாக்டர். கஃபீல்கான் செயல்படவில்லை. ஆகஸ்ட் 11-ம் தேதி முறையான அனுமதி பெறாமல் விடுப்பில் சென்றிருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து முறையான தகவலை  உயர் அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை'' எனக் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து  இன்று கஃபீல்கான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, குழந்தைகள் இறந்த சமயத்தில், டாக்டர். கஃபீல்கான் சொந்தப் பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமானக் குழந்தைகளைக் காப்பாற்றியதாக சொல்லப்பட்டது. 2013-ம் ஆண்டு, அரசு மருத்துவமனையில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தன் சொந்த க்ளீனிக் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றதாக கஃபீல்கான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அது நிரூபணமானது.  

இந்த ஆண்டு மட்டும் பகவான்தாஸ் மருத்துவமனையில் 1,304 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். குழந்தைகள் பலியான விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close