Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமேஸ்வரத்தில் 'நீட்' தேர்வு கொடும்பாவி எரிப்பு!

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நீட்தேர்வு கொடும்பாவி எரிக்கப்பட்டது.
 

நீட் தேர்வு கொடும்பாவி எரிப்பு

 

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி  ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் 196.5 மதிப்பெண் பெற்றிருந்தார். இந்நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மனம் உடைந்த நிலையில் இருந்த அனிதா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வு நடைமுறையை அமல்படுத்திய மத்திய அரசு, அதைத் தவிர்க்க முன் வராத மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடந்தது.

பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தமிழர்  தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கண். இளங்கோ தலைமையில் 'நீட் தேர்வு' கொடும்பாவி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதில் தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவு மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சதீஷ், செந்தில் ஆகியோரும் பங்கேற்றனர். பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கொளுத்தப்பட்ட கொடும்பாவியை அப்புறப்படுத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close