Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலையை மீட்க கோவில்களுக்குத் தொடர்ந்து பயணிக்கும் பன்னீர்செல்வம்?

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தனக்குச் சொந்தமான டீக்கடை அருகில் இருக்கும் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி சிறப்பு யாகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும், எங்கு இருந்தாலும் வருடம் தோறும் குருப்பெயர்ச்சி நாளில் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டு அங்கே நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்வது பன்னீர்செல்வத்தின் வழக்கம். அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர், சாமி தரிசனம் முடித்துவிட்டு சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து, பெரியகுளம் அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு வழிபாடு நடத்த புறப்பட்டுச்சென்றார்.

தர்மயுத்தத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் யுத்தத்தில் வெற்றிபெற்றதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி அணியுடன் கரம் கோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தச் சூழலில் நேற்று, ஓ.பன்னீர்செல்வம், தனது பூர்வீக ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வத்தின் குலதெய்வமான வனப்பேச்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இன்று காலை குருப்பெயர்ச்சி சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவையெல்லாம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவே தொடர்ந்துகோவில்களுக்குப் பயணப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்திவருகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள் பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டாரங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close