Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையில் ஒரு கானகம்.. திருச்சி மத்தியச் சிறை பசுமை வனமாக மாறப் போகிறது!

திருச்சியில்  ஷைன் திருச்சி அமைப்பு 'காவிரி பூமியில் ஒரு கானகம்' என்ற தலைப்புடன் மத்தியச் சிறைச்சாலையில் மரம் நடும் பணியில் இறங்கியுள்ளது.

prison

இது சிறைத்துறை நிர்வாகத்தின் உதவியோடும் மற்றும் மத்தியச் சிறை வளாகத்தில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் திட்டமிட்டது, ஷைன் திருச்சி அமைப்பு.

பாரம்பர்ய நாட்டு ரக மரங்கள் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தில் வளர்க்கப்படும் மரங்கள் அனைத்துமே நாட்டு வகை மரங்களாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஏற்கெனவே ஒரு பாகமாக ஆயிரக்கணக்கான மரங்கள் சிறைச்சாலையில் நட்டுவிட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று  காவலர் குடியிருப்பில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மரம் நடும் நிகழ்வில் 44 வகையைச் சேர்ந்த 2130 மரங்கள் நடப்பட்டன.

trichy

இன்றைய மரம் நடும் விழாவைத் தொடங்கி வைத்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. மரம் நடுதல் பற்றி அவர் பேசியதாவது, "திருச்சி மாநகரத்தை ஆரோக்கியம் மற்றும் இயற்கை சூழல் நிறைந்த மாநகரமாக மாற்றுவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள் தேவையில்லாத விசயத்தில் தலையிடுவதை விட்டு விட்டு மரம் நடுதல் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். எனக்குத் தெரிந்து திருச்சியில் மிகவும் சுத்தமான இடம் மத்தியச் சிறைச்சாலைதான்.

அத்தகைய, சரித்திரப் புகழ் பெற்ற திருச்சி மத்தியச் சிறைச்சாலை பசுமை வனமாக மாறும் காலம் வந்து விட்டது. இந்த மரம் நடுதல் திட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய ஆவலாக உள்ளது. எந்த நேரத்திலும் நிர்வாகத்தை அணுகலாம் " என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close