Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சரவை மாற்றம்..! புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

மத்திய அமைச்சரவை மாற்றம் மோடி

த்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த 10 நாட்களாக உலவிய செய்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு வைபவம் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்கலாம் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.
உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிவ் பிரதாப் சுக்லா மத்திய அமைச்சராகப்பதவி ஏற்கஉள்ளார். இவர் உ.பி மாநில அரசில் அமைச்சர் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். பீகார் மாநிலத்தில் இருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்வினி குமார் என்பவரும் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். பீகார் மாநில அமைச்சராக இருந்த அனுபவம் பெற்றவர் இவர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., ராஜ்குமார் சிங் என்பவரும் மத்திய அமைச்சராக உள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி வீரேந்திர குமாரும் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் பணியாற்றிவர். அவசர நிலை காலத்தின் போது 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து லோக்சபா எம்.பி ஆகி இருக்கும் ஆனந்தகுமார் ஹெக்டேவும் மத்திய அமைச்சர் ஆக உள்ளார்.
இவர்களைத் தவிர முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஹர்தீப் பூரியும் மத்திய அமைச்சராக உள்ளார். ஐ.எஃப்.எஸ் ஆவதற்கு முன்பு ஜெயபிரகாஷ்நாராயணன் இயக்கத்தில் பணியாற்றியவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து லோக்சபாவுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட கஜேந்திர சிங் செகாவத், உத்தரபிரதேசத்தில் இருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யபால் சிங் ஆகியோரும் மத்திய அமைச்சர் ஆக உள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்போன்ஸ் கன்னண்தானம் என்பவரும் அமைச்சரவையில் சேருகிறார். 1994-ம் ஆண்டு டைம்ஸ் வார இதழ், உலகளாவிய இளம் தலைவர்கள் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close