Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் களை கட்டும் ஓணம் திருநாள் கொண்டாட்டம்..!

மதுரையில் களை கட்டும் ஓணம் திருநாள். ஓணம் திருநாளை முன்னிட்டு மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மதுரை மாநகரில் குடும்பத்துடன் வசிக்கும், பணிபுரியும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக  கொண்டாடும் வகையில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. மலையாள சமாஜம் சார்பாக எல்லீஸ் நகரில் ஓணம் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது.

கோப்புப்படம்

இதில் ஓணத்துக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டது. பஜார்களில் ஓணத்துக்காக பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் கேரள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் மலையாளத்துறை சார்பில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. முனைவர் ஜிதேஸ் தலைமை தாங்கினார். இந்திய மொழியியல் புலம் தலைவர் முனைவர் கலைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் விழாவை கொண்டாடினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையைத் தொடர்ந்து ஓணம் மதுரையில் களை கட்டியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close