Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முத்துலட்சுமியின் ஆன்மா கேட்கும்' - உருகும் ஜி.வி.பிரகாஷ்! #NEETKilledAnitha

அனிதாவின் மரணம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே, அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அனிதாவின் மரணத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ்


அனிதா உயிரிழந்த அன்றைய தினமே, நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அனிதாவின் தந்தைக்கு நேரில் ஆறுதல் கூறினார். 


இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய நாட்டுக்கு முதல்பெண் மருத்துவராகிய முத்துலட்சுமியின் ஆன்மா கேட்கும், என் தங்கை அனிதாவுக்கு நீங்கள் இழைத்த அநீதிக்கான நீதியை" என்று கூறியுள்ளார்.


மேலும், அனிதாவுக்கு நீதி கேட்டு #RIP_dr_anitha_mbbs, #banneet #NEETKilledAnita என்று தொடர்ந்து பதிவுகளை செய்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close