Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்துக்கு பத்து கோடி மானியம்!

மதுரை மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்த்துக்கு  பத்து கோடி ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது. பருவமழையை நம்பி விவசாயம் செய்ய காத்திருப்பதால் காலம் வீணாகிறது. விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அதே நேரம், விவசாயிகள் வருமானத்துக்காக விவசாயத்தை செய்தே ஆகவேண்டிய சூழல். இப்படி குழம்பிக்கொண்டிருக்கும் விவசாயிகளை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயிர் செய்ய தோட்டக்கலைத்துறையினர்  தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்

சொட்டுநீர்

மதுரை மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்வதற்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனையுடன், அரசு வழங்கும் நூறு சதவிகித மானியத்தையும் வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர். இதற்காக ஆர்வமுள்ள விவசாயிகளை  தேர்வு செய்து  வருகிறார்கள். இதன் மூலம் இரண்டாயிரம்  எக்டேரில் கரும்பு, பருத்தி, மக்காசோளம், நிலக்கடலை, தென்னை, பயறு வகைகளுக்காக சொட்டு நீர்பாசன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.  தமிழகம் முழுக்க சொட்டு நீர் பாசனத்துக்காக 803 கோடி ரூபாய் செலவிட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பத்து  கோடி ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், குறைந்த நீரில் நிறைந்த மகசூலை விவசாயிகள் பெற முடியும் என்கிறார்கள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள். விவசாயிகள் ஆர்வத்துடன் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறினால், பலன் பெறலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close