Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அனிதா உங்கள் மகள் அல்ல, நீட்டை எதிர்க்கும் தமிழகத்தின் மகள்' - ஸ்டாலின் உருக்கம்

’அனிதா உங்களுக்கு மட்டும் மகள் அல்ல நீட்டை எதிர்க்கும் தமிழகத்தின் மகள்’ என்று அனிதாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசியிருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அனிதா. இவர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் நீட் தேர்வினால் மருத்துவபடிப்பில் சேரமுடியாமல் போனது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அனிதா கடந்த 1ம்தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

 

இந்நிலையில் அனிதாவின் உடலுக்கு திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அனிதாவின் தந்தை, அவரது மகன்களிடம் பேசினார். 'அனிதா உங்களுக்கு மட்டும் மகள் அல்ல நீட்டை எதிர்க்கும் தமிழகத்தின் மகள்.  நீட் தேர்வால் இனி எந்த அனிதாகளின் உயிர்களையும் பறிபோகவிடமாட்டோம் இது தான் இறுதியாக இருக்கும். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் எதுவாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள்' என்று அனிதாவின் குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசியிருக்கிறார்  ஸ்டாலின் .

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் 'தமிழக அமைச்சர்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே டில்லிக்கு சென்றுவந்தனர். நீட் தேர்வில் நல்ல முடிவு ஏற்படுவதற்காக அமைச்சர்கள் டில்லிக்கு செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பிய மசோதா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிடும் என நம்பிக்கையாக சொன்னார். இதையெல்லாம் நம்பி காத்திருந்த அனிதா ஏமாற்றப்பட்டதால் இவ்வாறான முடிவிற்கு வந்துள்ளார் என வேதனைபடுகிறோம்.

அனிதாவின் உயிரிழப்பு தற்கொலை என சொல்லமாட்டேன். இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்திருக்க்கூடிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்., சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித்தலைவர்களையெல்லாம் அழைத்துள்ளேன். அவர்களுடன் கலந்து பேசி எதிர்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் இதனை எவ்வாறு அணுகுவது கலந்தாலோசித்து முடிவு எடுக்க இருக்கிறோம். அனிதாவின் மறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளோம்” என்றார். 

இதனையடுத்து அனிதாவின் உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு இடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்த போது ஸ்டாலினும் இறுதி வரை இடுகாட்டிற்கு நடந்தே வந்தார். சுடுகாட்டிற்கு வந்தபிறகு தான் கிளம்பினார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close