Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நித்தியானந்தாவுக்கு எதிராகப் போராடியவர் மாரடைப்பால் மரணம்!

நித்யானந்தாவை எதிர்த்து காஞ்சிபுரத்தில் போராட்டங்களை நடத்திய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மாரடைப்பால் இன்று காலை காலமானார்.

நித்யானந்தா

நித்தியானந்தா தனது சீடர்களை அனுப்பி மடத்தையும் சொத்துகளையும் கைப்பற்ற நினைக்கிறார். நித்தியானந்தா பிடியிலிருந்து மடத்தை மீட்கும் வரை போராட்டத்தைத் தொடருவோம்” எனத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் விஜயகுமார்.

விஜயகுமார்

 

காஞ்சிபுரத்தில் உள்ள சேக்கிழார் பண்பாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் விஜயகுமார். காஞ்சிபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஞானப்பிரகாச மடத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் வெளியேற வேண்டும் எனப் போராடியவர். காஞ்சிபுரத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் போராட்டத்தையும் நடத்தினார். தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டை மண்டல நிர்வாகிகளைச் சந்தித்து, நித்தியானந்தாவுக்கு எதிராகப் போராடுவதற்காகச் சங்கத்தை வலிமை படுத்திக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு தொண்டை மண்டல சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் நித்தியானந்தா எதிர்ப்பாபளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close