Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலனை வீடியோ மூலம் சிக்கவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட காதலி..!

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய காதலனை வீடியோ காட்சி மூலம் சிக்க வைத்துவிட்டு, மரணத்தைத் தழுவியிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த பெண்.

திருப்பூர் மாவட்டம் சேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேடர்பாளையம் பகுதி ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேவதியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரேவதி பயன்படுத்திய மொபைல்போன் ஒன்று காவல்துறையின் விசாரணையில் சிக்கியிருக்கிறது. அந்த மொபைல்போனின் ரகசிய பாஸ்வேர்டை டீ-ஆக்டிவேட் செய்த காவல்துறையினர், மொபைல்போனின் கேலரியைத் திறந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது ரேவதி இறப்பதற்கு முன்பு தன்னுடைய மரணம் குறித்து பேசிய வீடியோ காட்சி ஒன்றை அந்த மொபைல் போனில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அந்தப் பதிவில், "ரேவதி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருந்த ஜெராக்ஸ் கடை ஒன்றில் பணியாற்றியபோது, வெங்கடேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக கூறியிருந்த வெங்கடேஷ், சமீபகாலமாக தன்னுடன் பேசுவதை தவிர்த்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் பேசியிருக்கிறார் ரேவதி.

அந்த வீடியோ பதிவில் பேசியவாறே, தன்னுடைய காதலன் வெங்கடேஷின் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு, ரேவதி தற்கொலையும் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, வீடியோ பதிவில் ரேவதி குறிப்பிட்டிருந்த வெங்கடேஷ் என்பவரை கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வாணிப்புத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ரேவதியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close