Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அனிதா பெயரில் சட்டம் இயற்றப்பட வேண்டும்'- திருமாவளவன் கோரிக்கை

அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலத்தில் பல இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், அனிதாவின் குடும்பத்தினரோ இந்த உதவித்தொகையை வாங்கு மறுத்துவிட்டனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். 

திருமாவளவன்

இது குறித்து திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, 'அனிதாவின் குடும்பம் அரசு தரும் நிதியுதவியை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். அதை நான் வரவேற்கிறேன். அரசின் நடவடிக்கைகளால் தான் அனிதா உயிரிழந்தார். மாநில அரசின் மெத்தனப் போக்காலும் மத்திய அரசின் நயவஞ்சக போக்காலும்தான் அனிதா இறந்தார். வன் கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 7 லட்ச ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதன் பேரில்தான் தமிழக அரசு இந்த நிதியை அனிதா குடும்பத்துக்கு கொடுக்கிறதா? அப்படிப்பட்ட எண்ணத்தில் இந்த நிதியுதவியை அரசு கொடுத்தால், அது கண்டிக்கப்பட வேண்டியது. எனவே அனிதாவின் குடும்பத்தின் மீது இரக்கம் கொண்டு இந்த நிநியுதவி கொடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. 'அனிதா சட்டம்' வருவதற்கான தேவை இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். மத்திய அரசு மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடாத வகையில் அனிதா சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நீட் தேர்விலே ஒரு போலியான நம்பிக்கையை கொடுத்த வாக்குறுதியை கொடுத்த நிர்மலா சீதாராமனுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது' என்று கூறினார்.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close