Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள பஞ்செட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க-வினர்

நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'எம்.ஜி.ஆர். பிறந்தார், வாழ்ந்தார் இறந்தார். ஆனால், அவர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. அதேபோல, தன்  வாழ்நாள்  முழுவதும்  மக்களுக்காக  உழைத்துவர் ஜெயலலிதா. கடைக் கோடி தொண்டனும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விருப்பப்பட்டவர் ஜெயலலிதா. ஆனால், அ.தி.மு.க-விலேயே இருந்து கொண்டு சிலர் எதிர்க்கட்சி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனக்கு வாரிசாக ஜெயலலிதா அவர்கள் எந்த ஒரு தனி மனிதனையும் சுட்டிக்காட்டவில்லை. ஜெயலலிதா அவர்களின் சம தர்ம கொள்கைதான் என்னைப் போன்ற ஒரு சாதாரண விவசாயியின் மகனை ஆட்சி பொறுப்பேற்க வைத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 'இரட்டை இலை சீக்கிரம் நம்மிடம் வரும். நல்லாட்சி மலரும். ஜெயலலிதா மீது பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும் விசுவாசத் தொண்டர்களுக்கும் யாராவது தீங்கு செய்ய நினைதால் மக்கள் அவர்களின் துரோகத்தை தடுத்து நிறுத்துவார்கள்' என்று பேசினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close